மாநகரில் அசுர வேகத்தில் இயங்கும் தனியார் பஸ்களால் அதிகரிக்கும் விபத்து

திருப்பூர்,பிப்.24:திருப்பூர் மாநகரப்பகுதியில் அசுர வேகம் எடுக்கும் தனியார் பேருந்துகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.திருப்பூர் பகுதிகளில் பின்னலாடை தொழில்கள் அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பின்னலாடை தொழில்கள் மட்டுமல்லாமல், டையிங், நிட்டிங், வாஷிங், உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த தொழில்களில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் திருப்பூர் மாநகரப் பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் பகுதிகளில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கைக்கேற்ப தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாநகரப்பகுதிகளில் தங்கி பணியாற்றக்கூடிய தொழிலாளர்களிள் அதிகப்படியானோர் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளின் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். இதனால் திருப்பூர் மாநகரில் இயங்கக்கூடிய தனியார் பேருந்துகள் அதிக இரைச்சலுடைய பாடல் சத்தங்களுடனும், அதிக சத்தம் கொண்டு ஹாரன்களை வைத்தும் அரசு வேகத்தில் செல்கிறார்கள். இது போன்று தனியார் பேருந்துகள் அரசு வேகத்ன் செல்வதால் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மோதி  அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: திருப்பூர் மாநகரப்பகுதியில், மினி பஸ்கள், மற்றும் தனியார் பஸ்கள் அதிகம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் நேரக்கணக்கில் இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது. மேலும் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகளின் அதிகமாக ஏர் ஹாரன்களை பயன்படுத்துகிறார்கள். நகரப்பகுதிக்குள் செல்லும் போது ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பதட்டம் ஏற்பட்டு விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்.டி.ஓ, மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனை மாநகரப்பகுதியில் உடனடியாக கட்டுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: