திருத்தணியில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

திருத்தணி: திருத்தணியில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருத்தணியில் சிறப்பு பெற்ற புராதன திரவுபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதி ஹோம பூஜைகளை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, விமான கோபுரம் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வரும் 23ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

Related Stories: