செந்துறையில் மது விற்றவர் கைது

 

நத்தம், ஏப். 21: நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் எஸ்ஐ மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செந்துறையில் மதுபான கடை செயல்பட்ட பழைய இடத்தில்நல்லான்புதூரை சேர்ந்த கருப்பையா (46) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கருப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 26 மதுபாட்டில்களை
பறிமுதல் செய்தனர்.

Related Stories: