மேற்குவங்கத்தினர் ஓட்டு போட சம்பளத்துடன் கூடிய விடுமுறை

சென்னை: மேற்குவங்கத்தில் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணியாற்றி வரும் மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் வாக்குரிமை உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடைபெறும் 2 நாட்களிலும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குறித்து மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் சி.சரவணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: