கருங்குளத்தில் நலத்திட்ட உதவி சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினா

செய்துங்கநல்லூர், பிப்.23: வைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகுண்டம், ஏரல், சாத்தான்குளம், தாலுகா பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கான ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருங்குளத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைகுண்டம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ் வரவேற்றார். சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.7கோடியே 75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் வைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஏரல் வட்டாட்சியர் இசக்கி ராஜ், ஏரல் சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் லிங்கராஜ்,  மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் ஜீவரேகா, தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர்  பேச்சியம்மாள், கருங்குளம் யூனியன்  துணைச்  சேர்மனும் கருங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான லட்சுமண பெருமாள்,  கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், கருங்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் லெட்சுமண பெருமாள், வைகுண்டம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார், ஏரல் மண்டல துணை வட்டாட்சியர் சேகர், அதிமுக  வைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், வைகுண்டம் வருவாய்ஆய்வாளர் சிதம்பரநாதன், வல்லநாடு வருவாய் ஆய்வாளர் மாசாணமணி, தெய்வச்செயல்புரம் வருவாய் ஆய்வாளர்  வெள்ளத்தாய், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் இருதயமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: