பதுக்கல் மது விற்ற 3 பேர் கைது

நத்தம், ஏப். 20: நத்தம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை ெசய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், எஸ்ஐக்கள் மலைச்சாமி, கார்த்திகேயன் மற்றும் போலீசார் நத்தம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டி பஸ் நிறுத்தப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (46) என்பவர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பண்ணியாமலை பகுதியில் தான் நடத்தும் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வம் (56), செந்துறை மங்களப்பட்டி பிரிவு பகுதியில் பதுக்கல் மது விற்பனையில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் (39) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

Related Stories: