காரைக்கால் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 46ம் ஆண்டு திருவிழா

காரைக்கால், ஏப்.20: காரைக்கால் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 46ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழாவின் 7ம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காரைக்கால் நகரில் கடைதெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம். இவ்வாலயத்தின் 46ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று மாரியம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மதகடி பகுதியில் உள்ள உஜ்ஜயினி காளியம்மன் ஆலயத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கடைத்தெரு மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Related Stories: