×

சொன்னாரு..! செஞ்சாரு..!! முதலமைச்சர் கோப்பை

சொன்னாரு: தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளை உலகத்தரத்தில் நடத்தவும், வெற்றி பெறுபவர்களுக்கு உயரிய பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும்; அதன்மூலம், தமிழகத்தில் விளையாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் திமுக அரசு அறிவித்தது.

செஞ்சாரு: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்த வழிவகை செய்யும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தனது முதல் கையெழுத்தாக முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளை நடத்த ரூ.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டார். மேலும், சிலம்பம், கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களும் முதலமைச்சர் கோப்பையில் இணைக்கப்பட்டது.

2022க்கு முன்னர் சாதாரண விளையாட்டுப் போட்டியாக நடைபெற்று வந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகள், அதற்குப் பிறகு சிறப்பான தரத்தில் நடத்தப்பட்டன. குறிப்பாக, மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்கள், தங்கும் வசதிகள், உயரிய பரிசுத்தொகைகள், 3% இடஒதுக்கீட்டில் அரசு வேலை பெறத் தகுதி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் புத்துணர்ச்சி பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்ததும் இந்தத் தொடரின் வெற்றிக்குச் சான்று. மேலும், கிராமப்புற வீரர்களுக்கும் தரமான பயிற்சிகள் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது. 2023 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.50.86 கோடி நிதி வழங்கப்பட்டது. 3,76,000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

2024 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி நிதி வழங்கப்பட்டது. 5,29,558க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி நிதி வழங்கப்பட்டது. 8,79,783 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Tags : Sencharu ,Chief Minister's Cup ,DMK government ,Tamil Nadu ,
× RELATED அமித்ஷாவை வரவேற்க சென்ற அண்ணாமலை;...