×

தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் குறித்து 59 முறை பேசியது ஏன்?: மோடிக்கு கார்கே கேள்வி

புதுடெல்லி: டாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா தோல்வியடைந்தது. தொகுதி மறுவரையறை விவகாரத்தை முன்வைத்து கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 2023ம் ஆண்டே நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை அமல்படுத்தாமல் ஒன்றிய அரசு காலம் கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. பெண்களின் நலனில் அக்கறை கொண்டதாக காட்டும் ஒன்றிய பாஜக அரசு, ஹத்ராஸ் மற்றும் உன்னாவ் பகுதிகளில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களில் நீதி வழங்க தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இதனை ‘வெற்று அரசியல் உரை’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது, அரசு தொலைக்காட்சியை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்தியுள்ளார். தனது உரையில் 59 முறை காங்கிரஸ் கட்சியை பற்றி பேசிய பிரதமர், பெண்களுக்கு தேவையான முக்கிய பிரச்னைகளை பற்றி ஒரு சில முறை மட்டுமே குறிப்பிட்டார். பொய்களை பேசுவதை நிறுத்திவிட்டு, 543 மக்களவை தொகுதிகளிலும் உடனடியாக 33 மகளிர் சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மசோதா தோல்வியடைந்த விரக்தியில் உள்ள பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக பெண்களை பயன்படுத்துகிறார்’ என்று அவர் குற்றம் சாடினார்.

Tags : Congress ,Kharge ,Modi ,New Delhi ,Parliament ,Nari Shakti Vandan ,
× RELATED அமித்ஷாவை வரவேற்க சென்ற அண்ணாமலை;...