- மன்சூர் அலிகான்
- திமுகா
- தமிழ்நாடு சட்டமன்றம்
- இந்திய ஜனநாயக புலிகள் கட்சி
- Lalkudi
- திருச்சி கிழக்கு
- திருவரம்பூர்
- Manapara
- திருச்சி மாவட்டம்
- லால்குடி
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகரும், சமூக ஆர்வலருமான மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டது. லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி போட்டியிலிருந்து விலகுவதாகவும், இதே போல் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை தொகுதியில் உள்ள வேட்பாளர்களும் விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து மன்சூர்அலிகான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் பிரசாரம் செய்து வந்தேன். மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். நிதிநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு கால சூழல் காரணமாக போட்டியிலிருந்து விலகி, திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறேன். ஒன்றிய அரசோடு அதிமுக, விஜய் கட்சி, சீமான் ஆகியோர் கூட்டு வைத்துள்ளனர்.
தொகுதி வரையறை என்பது ஏமாற்று வேலை, தமிழகத்தை காப்பாற்றக்கூடிய மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி வருகிறார். தமிழகத்தில் பாஜவை நுழைய விடக்கூடாது. விஜய் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் என்னை தவெகவுக்கு வருமாறு அழைத்தனர். அவர்கள் அன்பு எனக்கு பிடித்திருந்தது. எனது ஆதரவை திமுகவிற்கு தெரிவித்துள்ளேன். திமுகவில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
