6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.23: தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சித்திரைச்செல்வன் தலைமை வகித்தார். புதிதாக தமிழக அரசு அறிவித்துள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் அனைத்து பணியிடங்களையும் கால முறைப்படி இடங்களாகவும் ஆய்வக நுட்பனர் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்து ஆய்வக நுட்பனர் பணியிடத்தை காலமுறை பணியிடமாக அறிவிக்க வேண்டும். 2002 மற்றும் 2003ம் ஆண்டு ஆய்வக இருப்பவர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆய்வக நுட்புனர்களையும் நீதிமன்ற உத்தரவின்படி பணிவரன்முறை செய்து அவர்களை பழைய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 2009ல் வெளியிட்ட ஆய்வக நுட்பனர் கவுன்சில் அரசாணையை 417 உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆய்வக நுட்புனர் காலியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். சி.எம்.எல்.டி பணியிடம் உருவாக்க வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது தமிழக அரசு மாநில நிர்வாகிகளை அழைத்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: