ஜெயங்கொண்டம், ஏப்.18: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தேர்தல் பணியில் பணிபுரிய உள்ள முன்னாள் ராணுவத்தினர், பணி ஓய்வு பெற்ற காவல்துறையினர், மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பணி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடந்தது.
அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் முன்னிலை வகித்தார். அதே போன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் காவல் ஆய்வாளர் அசீம் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் ராணுவத்தினர், பணி ஓய்வு பெற்ற காவல் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட எஸ்.பி அறிவுரைகள் வழங்கினார்.
