ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு 16ம்தேதியுடன் (நேற்று) இறுதித் தேர்வுகள் முடிந்ததை அடுத்து, இன்று (17ம் தேதி) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை தொடங்குகிறது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் பணி நாட்கள் ஜூன் மாதம் தொடங்கும். இதற்கிடையே, ஏப்ரல் 25ம் தேதி வரை அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் 1 முதல் 3 வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 4ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Stories: