மந்த்ராலயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பக்தர்கள் பலி: 10 பேர் படுகாயம்

திருமலை: கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் தாரிகி தாலுகா உதய் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 18 பக்தர்கள், லோடுவேனில் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய சென்றனர். மந்த்ராலயம் அருகே சிலகலடோனா என்ற இடத்தில் நேற்று அதிகாலை வந்தபோது, லோடுவேனும், எதிரே வந்த சிமெண்ட் கலவை லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லோடுவேன் நசுங்கியது. சிமெண்ட் கலவை லாரி கவிழ்ந்தது. இடிபாட்டில் சிக்கி கனாயகனாஹள்ளி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பக்தர்கள் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: