தேனி கலெக்டர் பொறுப்பேற்பு

தேனி, பிப். 23: தேனி மாவட்ட கலெக்டராக கிருஷ்ணன் உண்ணி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேனி மாவட்ட கலெக்டராக இருந்த பல்லவி பல்தேவ், நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக தமிழக அரசின் வருவாய்த்துறை இணைச் செயலாளராக இருந்த கிருஷ்ணன் உண்ணி தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், 16வது கலெக்டராக நேற்று பொறுப்பேற்றார். இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். 2012ல் இந்திய ஆட்சிப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர். 2013 முதல் 2014 வரை திருச்சி மாவட்டத்தில் உதவி (பயிற்சி) ஆட்சியராகவும், 2014 முதல் 2016 வரை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சார்ஆட்சியராகவும் பணியாற்றினார். 2016 முதல் 2019 வரை நிதித்துறை துணைச் செயலாளராகவும் பணிபுரிந்து பதவி உயர்வின் மூலம் நிதித்துறை இணை ஆட்சியராக பதவி வகித்து வந்தார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் முறைப்படி பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே என் முதல் பணி. முதலில் மாவட்டத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது என்பது குறித்த தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். அனைத்தும் முழுமையாக ஆராய்ந்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

Related Stories: