டெல்லி: தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியானது. தொகுதி மறுவரையறை காரணமாக மக்களவை தொகுதி எண்ணிக்கை 543ல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 59ஆக உயருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தொகுதி எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயர உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் உள்ள மக்களவை தொகுதி வித்தியாசம் 41ஆக உள்ளது. ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் தமிழ்நாட்டுக்கும் உ.பி.க்குமான மக்களவை தொகுதி வித்தியாசம் 61ஆக அதிகரிக்கும்.

