கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி், பிப். 21: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துகள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ், முத்தமிழ்செல்வி கண்ணன், மாவட்ட பொருளாளர் பஷிர்அகமது, பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் இளவரசன் வரவேற்றார். மாவட்ட எஸ்சி துறை பிரிவு தலைவர் வக்கீல் ஜெயச்சந்திரன் கண்டன உரையை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் இளையராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டார தலைவர்கள் கொளஞ்சியப்பன்,  நிர்வாகிகள் நவமணி, கிருபானந்தன், பெரியசாமி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>