கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் போக்கு காட்டும் வருவாய்த்துறையினர்

திருப்பூர், பிப்.21: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் 2வது கட்டமாக வருவாய்த்துறையினர், போலீசார், நர்சுகள் போன்றவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை மற்றும் போலீசாரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் பலர் தடுப்பூசி போட முன்வரவில்லை. இதனால், அனைவரின் தகவல்களையும் சேகரித்து தற்போது சுகாதாரத்துறை சார்பில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அழைப்பு விடுத்து வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி போட வருவாய்த்துறையினர் விவரங்களை சேகரித்துள்ளோம். தற்போது அவர்களது செல்போன் எண்ணுக்கு அவர்களது பெயர், எந்த தேதியில், எந்த பகுதியில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். என தெரிவித்தனர்.

Related Stories: