சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் தமிழகத்தில் 106 டிகிரி வரையில் வெயில் அதிகரித்து மே மாதத்தில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடைகால வெப்பம் மற்றும் வெயிலின் தொடர்ச்சியாக மேலும் அது உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் பகுதியி்ல இருந்து வரக்கூடி காற்று தாமதமாக வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டத்தில் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கடலோரப் பகுதியில் அதிகரிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளை பார்க்கும் போது ஏப்ரல் மாத இறுதியில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதை பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு பெரும்பாலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகே அதிகரித்ததாக தெரியவருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 105 டிகிரி, 2017-104 டிகிரி, 2019-102 டிகிரி, 2021- 107 டிகிரி, 2023-104 டிகிரி, 2024-104 டிகிரி வெயில் நிலவியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில்105 டிகிரி வெயில் கொளுத்தியது. 2021ல் அதே அளவுக்கு ெ வயில் இருந்தது. அதற்கு பிந்தைய ஆண்டுகளில் 104 டிகிரியில் இருந்து அதிகரித்தது. 2017, 2023ம் ஆண்டுகளில் 102 டிகிரியாக குறைந்தது. மேற்கண்ட ஆண்டுகளில் இரண்டாம் வாரத்தில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்தது.
ஏப்ரல் மாதத்தில் பிற்பகுதியில் தொடங்கி சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால் மே மற்றும் ஜூன் மாதங்களில் உச்சத்தை அடையும். அப்போது தான் தமிழகத்தில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் நடக்கும். இந்த ஆண்டு மே மாதத்தில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி ஏப்ரல் 12ம் தேதி வறண்ட வானிலை நிலவும் என்று அறிவித்து இருந்த நிலையில் சென்னையில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தில் பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று தொடங்கி 17ம் தேதி வரையில் வெப்பநிலை உயரும். தற்போது வளி மண்டல காற்று சுழற்சி போன்ற அமைப்புகள் தற்போது இல்லாத நிலையில், ஏப்ரல் மாத இறுதி 10 நாட்களில் நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வெப்பநிலை 101 டிகிரி, 102 டிகிரி என்ற அளவில் இருந்தாலும், அதிகரித்து வரும் ஈரப்பதம் அசவுகரியத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
தற்போதைய வறண்ட வானிலை நீடித்து வரும் நிலையில் தமிழகத்தில் வேலூர், கரூர் மாவட்டங்களில் இப்போது வெயில் 105 டிகிரியை தொட்டுவிட்டது. 102 டிகிரியை தாண்டிவிட்ட நிலையில் சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப கடந்த இ ரண்டு நாட்களில் 66சதவீதம் மதல் 80 சதவீதம் வரை ஈரப்பதம் அதிகரித்ததால் அசவுகரியமும் மேலும் அதிகரித்தது.
அதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதத்தில் தமிழகத்தில் 6 நாட்கள் வெப்ப அலை வீசும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
