எடப்பாடி பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார் மனு

புதுடெல்லி: புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் நிறுவனரும் முதன்மைச் செயலாளருமான புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்று வழங்கி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த காலத்தில் திமுக ஆட்சியில் வளர்ச்சி வந்ததா? வெள்ளம் வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றுமே வரவில்லை அப்படி வந்திருந்தால் முதலமைச்சரே காணாமல் போய் இருப்பார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது அவதூறான செய்திகளை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினையும் அவதூறான வார்த்தைகளைக் கொண்டு பிரசார மேடைகளில் பேச ஆரம்பித்து விட்டார். இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் , தேர்தல் ஆணையர், விதி 125க்கு உட்பட்டு உடனடியாக எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோன்று அவர் தலைமை ஏற்று நடத்துகின்ற கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: