×

அதிமுக, தவெகவில் இருந்து விலகிய 400 பேர் திமுகவில் இணைந்தனர் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் நிகழ்ச்சி திருவண்ணாமலை தொகுதியில்

திருவண்ணாமலை, ஏப்.11: அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளில் இருந்து விலகிய 400 பேர், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, சின்னக்கல்லப்பாடி, பறையம்பட்டு, மேலத்திக்கான், தலையாம்பள்ளம் ஆகிய ஊராட்சிகளிலிருந்து அதிமுக, தவெக போன்ற கட்சிகளில் இருந்து விலகிய 400க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. அப்போது, தச்சம்பட்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அச்சுதன், முன்னாள் தொடக்க வேளாண்மை சங்கத் தலைவர் ராஜலட்சுமி, கீழ்அணைக்கரை அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், சின்னக்கல்லப்பாடி அதிமுக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், தொமுச செயலாளர் சவுந்திராஜன், பகுதி செயலாளர் பா.ஷெரீப், மாநில அமைப்பு சாரா தொமுச நிர்வாகி ஏ.ஏ.றுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,DVE ,DMK ,Minister ,E.V.Velu ,Tiruvannamalai ,Thachampattu ,Allikondapattu ,Chinnakallapadi ,Paraiyampattu ,Melathikkan ,Thalaiamballam ,
× RELATED பதற்றமான 80 வாக்குச்சாவடிகளுக்கு 98 நுண்...