- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- செய்யாறு
- திமுக அரசு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு பொதுப்பணித்துறை
- திமுக
- ஓ. ஜோதி
- மதச்சார்பற்ற கூட்டணி
- அனுபத்தூர் கூடரோடு
- திருவதூர்
- பரசூர் கூட்ரோடு
செய்யாறு, ஏப்.11: செய்யாறு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஒ.ஜோதியை ஆதரித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு அனுப்பத்தூர் கூட்ரோடு, திருவத்தூர் மற்றும் பாராசூர் கூட்ரோடு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசுகையில், ‘ தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட 5 பெரிய மாவட்டங்கள் பிரிக்க கோப்புகள் தயார் நிலையில் உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும். மேலும் திருவத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த நகர ஆரம்ப சுகாதார நிலையம் நிச்சயம் ஓராண்டு காலத்திற்குள் கொண்டு வருவேன் என்ற உத்தரவாதத்தை தருகிறேன். திராவிட மாடல் அரசு தொடர்ந்திட கழக வேட்பாளர் ஜோதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’ என பேசினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், நகர செயலாளர் விஸ்வநாதன், நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சீனிவாசன், தினகரன், ஞானவேல், திராவிட முருகன், ரவிக்குமார், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கோபு, செல்வபாண்டியன், ராஜீ, பார்வதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
