×

ஜெயங்கொண்டம் அருகே வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுபார்வையாளர் ஆய்வு

ஜெயங்கொண்டம், ஏப்.10: தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2026 ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆமணக்கந்தோண்டி, மதுரா, புதுச்சாவடி கிராமம், அரசினர் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களான 223 மற்றும் 224 உட்கோட்டை கிராமம், அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களான 254, 255 மற்றும் 256 மையங்களில் அடிப்படை வசதிகளான மின்வசதி, தண்ணீர் வசதி, சாய்தள வசதி, கழிவறை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் கைலாஷ் வான்கடே ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியர் சுசீலா, ஜெயங்கொண்டம் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : Election Observer ,Jayankondam ,Tamil Nadu Assembly General Elections 2026 ,Amanakkanthondi ,Mathura ,Puduchavadi ,Government ,Middle School ,224 ,Utkottai village ,Government Higher Secondary ,School… ,
× RELATED வாக்குச்சாவடியில் இருந்து 200...