சென்னை: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிற்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் வருகையால் அரசியலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதிமுகவை விஜய்யால் அசைத்து கூடப் பார்க்க முடியாது. அதிமுக என்பது ஒரு மலை, விஜய் தற்போது புதிதாக முளைத்தவர். அதிமுக என்ற மலையின் மீது மோதினால், விஜய்யின் மண்டை தான் உடையும்.
விசில் அடிப்பவர்களை சினிமா தியேட்டருக்கு தான் அனுப்புவார்கள், சட்டசபைக்கு அனுப்ப மாட்டார்கள். விசில் அடிக்கும் கூட்டத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை. எத்தனையோ பெரிய, பெரிய நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். ஆனால், கட்சி தொடங்கி சரித்திர வரலாற்றை படைத்தவர் எம்ஜிஆர் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
