×

இவ்வளவு நாள் பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்தவர் இப்போது பால்டாயில் பழனிசாமியாகிவிட்டார்: துணை முதல்வர் உதயநிதி ஆவேசம்

சென்னை: வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த முறை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எழிலனை வெற்றி பெற வைத்த நீங்கள் இம்முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எழிலனை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. மிகவும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்.

கலைஞருக்கும் அவர்தான் மருத்துவர், தலைவருக்கும் அவர்தான் மருத்துவர். எனக்கும் உடம்பு சரியில்லை என்னையும் டாக்டர் எழிலன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என சொன்னார். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். அனைவரும் உதயசூரியன் சின்னம் என்று முடிவெடுத்துவிட்டீர்கள்தானே? ஆயிரம் விளக்கு தொகுதியில் காலடி தடம் படாத இடமே இல்லாத அளவிற்கு மக்களோடு நெருங்கி செயல்படுபவர் எழிலன். கடந்த 5 வருடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதன் அடிப்படையில்தான் வாக்குசேகரிக்க வந்துள்ளோம்.

வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு, பாக்சிங் அகாடமி என பல்வேறு பணிகளை செய்தவர் எழிலன். இதெல்லாம் தொடர மீண்டும் அவரை சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும். நீங்கள் அந்த போட்டோவை காட்டு காட்டு என்று கூறுகிறீர்கள். நானும் ஒரு ஆர்வத்தில் காட்டிவிடுகிறேன். அதனால் பெரிய பஞ்சாயத்து ஆகிவிட்டது. என்மீது மிகுந்த கோபத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. என்னை ஆள்வைத்து அடித்தாலும் அடித்துவிடுவார் போல.

பாஜவிற்கு அடிமையாக இருக்கீங்கள், தமிழ்நாட்டு உரிமைகள் முக்கியம், மாநில நலன் முக்கியம், மக்கள் முக்கியம் என்றுதான் அதிமுகவை கூறினேன். பாஜவின், மோடியின் முரட்டு அடிமையாக இருக்காதீர்கள் என்று கூறினேன்.  பால்டாயில் குடித்து எப்போவோ நான் செத்து போயிருக்க வேண்டும். இருந்து நான் உயிரை வாங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

இவ்வளவு நாள் பாதம்தாங்கி பழனிசாமியாக இருந்தவர் இப்போது பால்டாயில் பழனிசாமியாகி விட்டார். பால்டாயில் ஞாபகத்திலேயே எடப்பாடி பழனிசாமி உள்ளார். தேர்தல் முடிவின் போது அவசர முடிவாக எதனையும் எடப்பாடி பழனிசாமி எடுத்துவிடக் கூடாது. தற்கொலை எதற்கும் தீர்வாக கூடாது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து, எங்கள் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராவதையும், திராவிட மாடல் 2.0 அமைவதையும் பார்க்க வேண்டும் என்றார்.

Tags : Baltai ,Udayanidhi Avesam ,Chennai ,Deputy Chief ,Udayanidhi Stalin ,Eilan Naganathane ,Secular Progressive Alliance of Thousand Lamak Assembly Constituency ,Valluwar Kotam ,
× RELATED நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு...