×

பெண்கள் சொந்த காலில் நிற்பதே உண்மையான வளர்ச்சி சொல்கிறார் நடிகை குஷ்பு

சென்னை: பெண்கள் சொந்த காலில் நிற்பதே உண்மையான வளர்ச்சி என்று நடிகை குஷ்பு கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் நடிகை குஷ்பு நேற்று அளித்த பேட்டி: பண பலத்தால் மட்டும் ஒரு நாடு முன்னேறிவிட முடியாது. மக்களுக்கு உண்மையான நன்மைகளைச் செய்யும் போதுதான் வளர்ச்சி சாத்தியம். ஆனால், அரசிடம் அத்தகைய தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லை.

தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதியைச் சுரண்டிவிட்டு, மீதமுள்ள சிறு தொகையை மக்களுக்கு பிச்சையாகப் போடும் நிலையே இங்கு நிலவுகிறது. பெண்களுக்கு மாதம் 1000 அல்லது 2000 ரூபாய் கொடுப்பது மட்டும் முன்னேற்றமாகி விடாது. பெண்கள் சொந்தக் காலில் நிற்பதே உண்மையான வளர்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Khushbu ,Chennai ,vice president ,BJP ,Chennai T. Nagar ,
× RELATED நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு...