கொரோனா காலத்தில் மூடிய சருகணி புறவழிச்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காளையார்கோவில், பிப். 21:  காளையார்கோவில் அருகே உள்ள சருகணி செல்லும் வழியில் கொரோனா காலத்தில் முள் வைத்து அடைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், கிராமமக்களும் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவிய போது கிராமங்களுக்குள் மற்றவர்கள் யாரும் வரக்கூடாது என தடுப்பதற்கான அடைக்கப்பட்டது. காளையார்கோவில் அருகே உள்ள சருகணி செல்லும் வழியும் முள் வைத்து புறவழிச்சாலை அடைக்கப்பட்டது.   தற்போது கொரோனா தொற்று குறைந்த பின்பும் சாலையைத் திறக்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 2 கி.மீ  தூரம் சுற்றி  தொண்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லவேண்டிய நிலை உள்ளது. அடைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை திறக்கப்பட்டால்  ஆலம்பக்கோட்டை, பணக்கரை, செட்டியேந்தல், பூதகுடி, உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். வாகன ஓட்டிகளுக்கும் 2 கி.மீ தூரம் சுற்றி எரிபொருள், காலவிரையம், பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலை இருக்காது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சருகணி - தொண்டி புறவழிச்சாலையை மீண்டும்  திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: