திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதி வளர்ச்சி அடைந்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

 

சென்னை: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதி வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசி திட்டத்தின்கீழ் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ. 1,500ஆக உயர்த்தப்படும். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும்

 

 

 

Related Stories: