விருதுநகர்: மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏப்.12 முதல் 25-ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பாஸ்பரஸ்,குளோரைடு, மெழுகு, அட்டை, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டுவரும் நிலையில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
