×

தேர்தல் விழிப்புணர்வு ‘பிங்க்’ பிரசார பேரணி

*குன்னூரில் கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார்

குன்னூர் : குன்னூரில் தேர்தல் விழிப்புணர்வு ‘பிங்க்’ பிரசார பேரணியை கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார்.​இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குன்னூரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ​

அதன் ஒரு பகுதியாக குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிம்ஸ் பூங்கா முன்பாக நேற்று சிறப்பு ‘பிங்க்’ தேர்தல் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’ என்பதை வலியுறுத்தும் வகையில், ஏப்ரல் 23 அன்று அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்வைக்கப்பட்டது.

Tags : Awareness ' ,Pink' Campaign Rally ,Coonoor Coonoor ,Abhilasha Kaur ,Pink' ,Coonoor.​As ,Election Commission of India ,
× RELATED கன்டென்ட் இல்லாமல் தினமும்...