×

கருங்கலில் ஐஎன்டியூசி நிர்வாகி மீது வழக்கு

கருங்கல், ஏப்.8: கருங்கல் பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வர்தன்விளை பகுதியில் ஒரு வீட்டில் அதிக ஒலியுடன் கூடிய ரேடியோ பெட்டி வைத்து அதிக ஒலி எழுப்பியதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அங்கு சுதர் ஐஸ்டஸ் (57), அவரது அண்ணன் காங்கிரஸ் ஐஎன்டியூசி கிழக்கு மாவட்ட தலைவர் பொன் ராஜா (62) ஆகியோர் தங்கள் வீட்டில் அதிக ஒலியுடன் ரேடியோ பெட்டி வைத்து அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொல்லை கொடுத்து கொண்டிருந்தனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் கேட்காதால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : INTUC ,Karungal ,Assistant Inspector ,Rajendran ,Vardhanvilai ,
× RELATED வாக்குச்சாவடியில் இருந்து 200...