×

சுயேச்சையாக மனு விசிக நிர்வாகி சஸ்பெண்ட்

உடன்குடி: திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் என்ற அய்யப்பன், திருச்செந்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புதலோடு மாநில தேர்தல் பணிக்குழு துணைப் பொதுச்செயலாளர் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், முரசு தமிழப்பன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் பொறுப்பில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Tags : Onankudi ,Anita Radakrishnan ,Dimuka ,Tiruchendur ,Murasu Tamilappan ,Vissika Ilyanchuthuga ,Ulashi Phasara ,Trinchendoor ,
× RELATED பெண்ணின் குடும்பத்தை ஊரைவிட்டு...