×

ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில் 104 டிகிரி பதிவானது

ஈரோடு : ஈரோட்டில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.ஈரோடு மற்றும் மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதில், கடந்த சில தினங்களாக 101 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதலே வெயில் சுட்டெரிக்க துவங்கியது. இதில், மதிய நேரத்தில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், வெயிலின் உஷ்ணம் தாங்காமல் வீடுகளில் புழுக்கம் ஏற்பட்டது. மேலும் வெப்ப காற்றால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தங்களது முகத்தை துணிகளால் மூடி சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி பதிவானது.

Tags : Erode ,
× RELATED வேதாரண்யம் பகுதியில் மா விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி