- வேதாரண்யம்
- Sembodai
- தெத்தகுடி
- கத்தரிபுலம் புஷ்பவனம்
- பெரியகுத்தகை
- வெள்ளப்பள்ளம்
- நலுவேதாபதி
- தலைக்னயிரு
- Senthura
- பாங்கனப்பள்ளி
- ருமேனியா
- Odtu
- நீலம்…
வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் மா விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, கத்தரிப்புலம் புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தூரா , பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு, நீலம் என 10க்கும் மேற்பட்ட வகையான மா வகைகள் 4000 ஆயிரம்ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ளது.
ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5,000 டன் மாங்காய்களை மாபழத்திற்காக தமிழகம் மற்றும் கேரளா,, ஆந்திரா , மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது இந்த ஆண்டுமா பழசீசனில் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மா விவசாயிகள் தெரிவித்தனர்.தற்போது ருமேனியா, ஒட்டு நீலம் அதிக அளவில் காய்த்து உள்ளது தொடர்ந்து கேரளாவிற்கு ஏற்றுமதி ஆவதால் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போது மா இலை மற்றும் மாங்காய்களில் புதிதாக கருப்பு பூச்சி தாக்கி உள்ளது. இந்த பூச்சி தாக்குதல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. புதிய இந்த கருப்பு பூச்சி தாக்குதலால் மா இலையில் இருந்த பூச்சிகளால் மா பிஞ்சுகளிலும் தாவி வீணாகி கீழே விழுந்து வருகிறது.
வேதாரண்யம் தோட்டகலை துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கிராமபுரங்களில் உள்ள மா மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்தவகையான பூச்சி தாக்குதலுக்கு இமிடாகுளோரி பைடு மருந்தை ஒரு லிட்டரில் தண்ணீரில் இரண்டு மிலி கலந்து தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர்.

