ஐபிஎல் பார்த்துவிட்டு திரும்பியபோது லாரி மீது கார் மோதி நீதிமன்ற ஊழியர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி

*போலீசார் விசாரணை

திருமலை : பெங்களூரில் நடந்த ஐபிஎல் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது லாரி மீது கார் மோதி நீதிமன்ற ஊழியர்கள் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பதி நீதிமன்றத்தில் மூத்த உதவியாளர்களாகப் பணியாற்றி வந்த ஹரிஷ் மற்றும் யுகந்தர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க நேற்றுமுன்தினம் பெங்களூரு சென்றனர். போட்டியை பார்த்த பின்னர் மீண்டும் திருப்பதிக்கு வர பெங்களூரில் இருந்து நேற்று காலை காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் கார் கங்காவரம் அருகே பெங்களூரு- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒய்எஸ்ஆர் சந்திப்பில் பலமேரில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி வேகத்தடை காரணமாக மெதுவாக சென்றபோது அதிவேகமாக வந்த கார் லாரியின் பின்னாள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கார் விபத்தில் சிக்கி சுக்குநூறாக நொருங்கியது. இதில் முன் சீட்டில் அமர்திருந்த ஹரிஷ் மற்றும் யுகந்தர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: