×

மளிகை கடையில் பணம் திருட்டு

 

சோழவந்தான், ஏப். 7: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் மளிகை கடை நடத்துபவர் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு ட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்கான ஹார்ட் டிஸ்க் போன்றவையும் மாயமாகி இருந்தது. இதேபோல் அருகில் உள்ள பாண்டிச்செல்வி என்பவரின் இ சேவை மையம், தங்கவேல் என்பவரின் பெட்டிக்கடை ஆகியவற்றின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு சில பொருட்கள் திருடு போனது உறுதியானது. ஒரேநாள் இரவில் 3 கடைகளில் திருடிய மர்ம நபர்கள் குறித்து, காடுபட்டி இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி வழக்குபதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Cholavandhan ,Rajkumar ,Mannadimangalam ,
× RELATED வாக்குச்சாவடியில் இருந்து 200...