×

பாகிஸ்தான் தாளத்திற்கு ஆடுகிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி விமர்சனம்

 

பாபனிப்பூர்: காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து பாகிஸ்தான் போடும் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தின் பார்பேடா மாவட்டத்தில் உள்ள பாபனிப்பூரில் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘2026ம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையின்போதோ அல்லது 2025ம் ஆண்டின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதோ காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பாகிஸ்தானின் தாளத்திற்கு ஆடிக்கொண்டு இருக்கின்றது, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. பாகிஸ்தானுடனான இந்த தொடர்பு எப்போதும் நாட்டின் மீது பெரும் சுமையாகவே அமைகின்றது. இதனை நாம் ஒருபோதும் அனுதிக்க முடியாது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மறுத்து பல தசாப்தங்களாக ராணுவத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

ஆனால் நாட்டை பாதுகாப்பவர்களுக்கு நீதி கிடைப்பதை பாஜ அரசு உறுதி செய்தது. இந்த சலுகையை அவர்களுக்க வழங்கியது. இதுவரை முன்னாள் ராணுவ வீரர்களின் வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.1.24லட்சம் கோடி நேரடியாக செலுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி நிலைநாட்டப்பட்டு, வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி தொடர வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியை அதிகாரத்தில் இருந்து வெளியே வைத்திருப்பது அவசியமாகும்.” என்றார்.

 

Tags : Congress ,Pakistan ,Modi ,Bhabanipur ,Congress party ,Barbeda district ,Assam ,
× RELATED சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!