டெல்லி: அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது குடும்பத்தினருக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி அரசு ஒப்பந்தங்களை அவர் வழங்கியதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, 16 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
