- அரியலூர் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர்
- அரியலூர்
- அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- மாவட்ட கலெக்டர்
- ரத்தின சாமி
அரியலூர், ஏப். 6: அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு : எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளராக பிரியங்கா சிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறல்கள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் அளித்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களை 6385165646 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது ariyalurac149@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அளிக்கலாம். மேலும் அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள கூட்டரங்கில் தினசரி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பின்வரும் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் – கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 4401, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04329-228845, 04329-228847 மற்றும் சிவிஜில் ஆப் வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
