×

தவெக வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்

குன்னூர் தொகுதியில் தவெக சார்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் வேட்பு மனுதாக்கல் செய்தார். கூட்டத்தைக் காட்டுவதற்காக நாமக்கல்லில் இருந்து தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒரு சுற்றுலா வேனில் தங்கராஜ் அழைத்து வந்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும், தனியார் காட்டேஜில் இருந்து அவர்கள் வேனில் புறப்பட்டனர்.

குன்னூர் பெரிய கரும்பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக 100 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் இது தொடர்பாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Tags : Thaweka ,Thangaraj ,Namakkal ,Coonoor ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு