×

ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி

அவனியாபுரம். ஏப். 2: மதுரை, அவனியாபுரம் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி பாகம்பரியாள். இவர்களின் மகன் முத்து தஷ்விக்(3). காளிதாஸ் பாஜ கட்சியின் ஊடக பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை நேற்று முன்தினம் அருகில் உள்ள ஊருணியில் குளிப்பாட்ட அழைத்துச்சென்றார்.

அப்போது அவரது மகனும் உடன் சென்றுள்ளார். திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க அவசரமாக வீடு திரும்பிய அவர், மகன் உடன் வந்ததை மறந்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் மகன் வீட்டில் இல்லை என மனைவி செல்போனில் கூறியதால் திரும்பி வந்த காளிதாஸ் தேடியதில் சிறுவன் ஊருணியில் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

 

Tags : Avaniyapuram ,Kalidas ,Indira Nagar ,Avaniyapuram, Madurai ,Bhagambariyal ,Muthu Dashvik ,BJP ,Jallikattu ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் வீட்டில் இருந்தபடியே வாக்களித்த முதியோர்