×

நடைபாதையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஊட்டி, ஏப்.3: ஊட்டி ஸ்டேட் பேங்க் லேன் செல்லும் நடைபாதையில் உள்ள இன்டர் லாக் கற்கள் சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊட்டி கமர்சியல் சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஸ்டேட் பேங்க், ஜி1 காவல் நிலையம் உள்ளிட்டவற்றிற்கு செல்வதற்கு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கடைகள், வணிக வளாகங்கள் போன்றவைகளும் உள்ளன. இந்நிலையில் இந்த நடைபாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்லாக் கற்கள் கொண்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் இவை தற்போது சேதமடைந்தும், இன்டர்லாக் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த நடைபாதையை சீரமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Ooty ,Ooty State Bank Lane ,Ooty Commercial Road ,Collector's ,State Bank ,G1 Police Station… ,
× RELATED அதிகரட்டி சுற்று வட்டார பகுதிகளில்...