×

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

ஊட்டி, ஏப். 5: வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலின்போது, அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையிலும் நாள் தோறும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியும் குறித்து கோலமிடுதல், பேரணி நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கையெழுத்து இயக்கம் நடத்தியும், செல்பி ஸ்பாட்டுகள் அனைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரந்தில் எவ்வாறு வாக்களிப்பது?, வாக்களிப்பதன் அவசியம் என்ன?, ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்து அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.  மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Ooty ,Nilgiris ,
× RELATED போலீசார் கொடி அணிவகுப்பு