சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை திருவல்லிக்கேணி பகுதிக்கு உட்பட்ட மாட்டாங்குப்பம், வி.ஆர். பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் தெரு 1 முதல் 6 தெருக்கள், பழனி அம்மன் கோயில் தெரு 1 முதல் 6 தெருக்கள், பழைய கட்டை தொட்டி தெரு, புதிய கட்டை தொட்டி தெரு, சுங்குவார் தெரு உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக நடந்து சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை அளித்தனர். திமுகவின் ஐந்தாண்டு கால சாதனை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்குசேகரிப்பின் போது, திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு, எம்பி தயாநிதி மாறன், பகுதி செயலாளர் மதன்மோகன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
