×

வில்லிவாக்கம் தொகுதியில் விசிகவுக்கு ஓட்டுக்கேட்ட ஆதவ் அர்ஜுனா: சமூக வலைதளங்களில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட ஆதவ் அர்ஜுனா விசிகவுக்கு ஓட்டுக் கேட்டதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. வாய்ஸ் ஆப் காமன் என்ற வியூகம் வகுக்கும் நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜுனா, சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அந்தக் கட்சியில் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் விசிகவில் இருந்துகொண்டு திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து அவரை நீக்கினார் அக்கட்சின் தலைவர் திருமாவளவன். அங்கிருந்து அவரை நீக்கிய பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு சில நேரங்களில் விசிகவை விமர்சித்தும் வருகிறார். தற்போது அவர் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் அந்த தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பரப்புரையின்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விசில் சின்னத்திற்கு வாக்குக் கேட்டவாறு சென்றவர், திடீரென விடுதலைச் சிறுத்தைகளுக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார். சமூக வலைதளங்களில் இந்த காணொலியைப் பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் பாவம் அவரே கன்ஃபூஸ் ஆகிட்டார் என கலாய்த்து வருகிறார்கள்.

Tags : Adhav Arjuna ,Villivakkam ,Chennai ,Tamil Nadu Victory Party ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...