×

திமுகவில் ஐக்கியமான சசிகலா கட்சி வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளருமான குமார் சசிகலாவின் தீவிர விசுவாசியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ராமதாஸ் பாமக மற்றும் சசிகலாவின் அஇபுமமுக இணைந்து உருவாக்கிய கூட்டணி தமிழக சட்டசபையில் போட்டியிடுகிறது. இதில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் சசிகலா கட்சியின் (அஇபுமமுக) வேட்பாளராக குமார் அறிவிக்கப்பட்டார்.

அவர் தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் முருகானந்தம், பழனிவேல் மற்றும் ஏழுமலை ஆகியோருடன் அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வசந்த கார்த்தியேகன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற திமுக வேட்பாளர் வசந்தவேல் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் நேற்று முன்தினம் இரவு தன்னை இணைத்துக் கொண்டார்.

Tags : Sasikala ,DMK ,Kumar ,Periyasevalai ,Thiruvennaynallur ,Villupuram district ,AIADMK ,Ramadoss ,PMK ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...