×

பாஜவின் மத அரசியலை விட விஜய்யின் மத அரசியல் மோசம்: கழுவி ஊற்றுகிறார் கருணாஸ்

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாஸ், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நடிகர் விஜய் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார். காதல் படத்தில் சொன்னது போல சின்ன கேரக்டர், மாப்பிள்ளை கேரக்டர், நண்பன் கேரக்டர், அப்படி எல்லாம் இல்லாமல் ஸ்ட்ரைட்டா ஹீரோ தான் என முதல்வர் நாற்காலி கனவில் வருகிறார். மக்கள் எந்த அளவு அங்கீகாரம் கொடுப்பார்கள் விரைவில் தெரியவரும்.

ஒரு பெரிய நட்சத்திரம் என்பதால் விஜய்யை பார்க்க கூட்டம் வரும். ஒரு நடிகர் என்றால் வேடிக்கை பார்க்க மக்கள் வரத்தான் செய்வார்கள். கூட்டம் ஓட்டாக மாறாது. கரகாட்டத்தை பார்க்க கூட கூட்டம் அதிகம் வருகிறது. 30 ஆண்டுகால சினிமா வாழ்வில் மக்களுக்கு அவர் என்ன செய்தார்? முக்கியமான பிரச்னைகளுக்கு விஜய் குரல் கொடுத்தாரா? தேர்தல் வந்த பிறகு ஜோசப் விஜய் என கிறிஸ்தவராக அடையாளம் காட்டுவது ஏன்? அவரது தந்தை, தாய் மதத்துக்கு திரும்பியதாக கூறுகிறார்.

இவர்களின் மத அரசியல் பாஜவின் மத அரசியலை விட மோசமான அரசியலாக உள்ளது. கிறிஸ்தவ மக்களின் பிரச்னைகளுக்காக கூட இவர் குரல் கொடுத்ததில்லை. விஜய் மீது வருமான வரி கட்டவில்லை என்ற வழக்கு இருக்கிறது. திமுக மீது குறை சொல்லியே ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கிறார். இதெல்லாம் மட்டமான அரசியல்.

கரூரில் சூட்டிங் எடுப்பதற்காக 41 பேரை கொன்று விட்டுச் சென்றவர்கள் தானே இவர்கள். விஜயை விட அரசியல் அனுபவம் உள்ளவன் நான் தான். விஜய் தேர்தலில் இது வரை போட்டி போடவில்லை. நான் 5 ஆண்டு எம்எல்ஏவாக இருந்து மக்களுக்கு சேவை செய்துள்ளேன். விஜய் ஹீரோ தான். நான் காமெடியன் தான். ஆனால் காமெடியன் தான் நிஜ ஹீரோ. இவ்வாறு பேசினார்.

Tags : Vijay ,BJP ,Karunas ,DMK ,Sivaganga ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...