×

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறைக்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மொத்த மக்களவை இடங்களை 543 ல் இருந்து 816 ஆக உயர்த்துவது தொடர்பான மசோதாவை நிறைவேற்றுவதற்கு அரசு ஆர்வமாக உள்ளது. வரும் 16ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:தொகுதி மறுவரையறைப் பணியை விரைவுபடுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவை கடந்த 2023ல் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. கடந்த 30 மாதங்களாக மசோதா மீது தூங்கி கொண்டு இருந்து விட்டு,தற்போது இதில் அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை கூட்ட உள்ளனர். மக்களவை உறுப் பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி அரசு தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றாலும், மக்களவைக்கான இடங்களில் விகிதாசார அதிகரிப்பு இருக்கும் என்று காங்கிரஸ் கட்சிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை ரீதியாக அரசு பின்னடைவைச் சந்தித்து வருவதால், சிறப்பு கூட்ட தொடரை கூட்டுகிறது. தேர்தல் காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Parliament ,Congress ,New Delhi ,Lok Sabha ,
× RELATED 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை...