×

பெட்ரோலிய பொருட்கள், எல்பிஜி காஸ் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: மேற்காசிய போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி பெட்ரோலிய பொருட்கள், எல்பிஜி காஸ் சிலிண்டர்களை பதுக்கி கள்ளசந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (எஸ்மா),எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணையின் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுடன் இணைந்து தினசரி சோதனை, ஆய்வுகள் நடத்த வேண்டும். தவறான தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

Tags : Union government ,New Delhi ,West Asian war ,
× RELATED எனது மவுனத்தை தோல்வியாக கருதாதீர்கள்:...