×

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அணு சக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதாமன் நேற்று அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் அரிதாமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது அணு சக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலாகும். இது 3,500 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய 8 ஏ-4 ஏவுகணைகள் மற்றும் 750 கிமீ தூரம் செல்லக்கூடிய 24 ஏ-15 ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. மேலும், வழக்கமான நீர்மூழ்கி கப்பல்களை விட மிகவும் ரகசியமாகவும், ஆழமாகவும் நீண்டநாள்கள் நீருக்கடியில் தங்கி செயல்படும் திறன் கொண்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிதாமன் 7,000 டன் எடையுடையது. கடலுக்கடியில் மிக அமைதியாக செல்லும் தொழில்நுட்பத்தை கொண்ட இதனை எதிரியின ரேடார்கள் கண்டறிவதும் கடினம்.  இந்நிலையில் ஐஎன்எஸ் அரிதாமன் நேற்று இந்திய கடற்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது. விசாகப்பட்டினம் சென்றுள்ள ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதன் அதிகாரப்பூர்வ இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

Tags : Navy ,New Delhi ,India ,
× RELATED 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை...